ஆத்திசூடி
Language :
Language
gurukula-audio-image
0.001.17
icon-rewindicon-playicon-forward
icon-volume

 

ப்புரவு ஒழுகு

oppuravu ozhugu

​​​​உலக வழக்கத்தை அறிந்து கொண்டு அதன் படி நடந்து கொள்.

நான் இப்படித்தான், எனக்கு மத்தவங்களைப் பத்தி கவலை இல்லை. அப்படீன்னெல்லாம் சொல்லாம உலகத்தோடு ஒத்துப் போகணும்.

 

துவது ஒழியேல்

othuvathu ozhiyel

​​படிப்பதை எப்போதும் நிறுத்தாதே.

கற்றுக் கொள்றதுக்கு வயதே கிடையாது. அதனாலெ கற்றுக் கொள்வதை எப்போதும் நிறுத்தாதே

 

வியம் பேசேல்

auviyam pesel

​​யார் கிட்டயும் பொறாமை கொண்டு பேசாதே.

பொறாமைங்கறது தவறான ஒரு குணம். அதனால நமக்கு கெட்டது தான் நடக்கும். அதனால யார் கிட்டயும் பொறாமை கொண்டு பேசாதே.

 

அஃகஞ் சுருக்கேல்

akkanj churukkel

அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.

கடைகள்ல எடை போட்டு பொருளை விக்கறத பாத்திருப்பீங்க.

சிலர் நிறைய லாபம் வரணுங்கறதுக்காக எடையில கொஞ்சம் கொறைச்சு மக்களை ஏமாத்திடுவாங்க. அது தப்பு. அப்படிப் பண்ணக் கூடாது.