ஆத்திசூடி
Language :
Language
gurukula-audio-image
0.001.29
icon-rewindicon-playicon-forward
icon-volume

 

ண்டொன்று சொல்லேல்

kandonru sollel

ப் போல் வளை

gna pol valai

னி நீராடு

sani niiraadu

யம்பட உரை

gnayampada urai

இடம்பட வீடு எடேல்

idampada viidu edel

இணக்கம் அறிந்து இணங்கு

inakkam arinthu inangu

ந்தை தாய்ப் பேண்

thanthai thai pen

ன்றி மறவேல்

nandri maravel

ருவத்தே பயிர் செய்

paruvatthe payir sei

ண் பறித்து உண்ணேல்

mann paritthu unnel

இயல்பு அலாதன செய்யேல்

iyalbu alaathana seiiyel

அரவம் ஆட்டேல்

aravam aattel

இலவம் பஞ்சில் துயில்

ilavam pannchil thuyil

ஞ்சகம் பேசேல்

vannchakam pesel

அழகு அலாதன செய்யேல்

azhagu alaathana seiiyel

இளமையில் கல்

ilamayil kal

அறனை மறவேல்

aranai maravel

அனந்தல் ஆடேல்

ananthal aadel

 

 

ண்டொன்று சொல்லேல்

kandonru sollel

கண்ணால பார்க்காத ஒரு விஷயத்தை தெரிந்தாற் போலப் பேசாதே.

நாம நேர கண்ணால் பார்க்காத ஒரு விஷயத்தை, மற்றவர் சொல்லி கேள்விப் பட்டோ, அல்லது கற்பனையாகவோ பிறரிடம் சொல்வது தப்பு.

 

ப் போல் வளை

gna pol valai

'ங' என்னும் எழுத்து எப்படி பார்ப்பதற்கு வளைந்திருக்கிறதோ அது போல் பெரியவர்களிடம் பணிவாக வளைந்து இருக்க வேண்டும்.

 

னி நீராடு

sani niiraadu

ஒவ்வொரு சனிக்கிழமையும் எண்ணை தேய்த்துக் குளி.

அது என்ன சனிக்கிழமை தேய்ச்சுக் கணும், செவ்வாய்க் கிழமை தேய்ச்சுண்டா என்ன ஆகும் ன்னு கேக்கக் கூடாது. வாரம் ஒரு நாள் எண்ணை தேய்த்துக் குளிக்கும் வழக்கத்தை வெச்சுக்கோன்னு அர்த்தம். அது உடம்புக்கு நல்லதுன்னு சொல்லிக் குடுக்கறாங்க. இப்போ ஸ்பா, மஸாஜ் அப்டீன்னெல்லாம் சொல்லறத எளிமையா அந்தக் காலத்துலேயே ஒரு நீதியா அவ்வையார் சொல்லி இருக்கார்.

 

யம்பட உரை

gnayampada urai

நம்ம பேச்சு கேக்கறவங்களுக்கு இனிமையா,சந்தோஷம் தரா மாதிரி இருக்கணும்.

நம்ம குரல்,நாம மூஞ்சிய எப்படி வெச்சுக்கறோம் ங்கறது எல்லாமே இதில் அடக்கம். நம்ப பேச்சு வெறும் வார்த்தைகளோ அல்லது அதுல இருக்கற விஷயங்களோ மட்டும் இல்ல. அதை நாம எப்படி சொல்லறோங்கறதும் முக்கியம். நாம பேசும் போது கேக்கறவங்க, இவர் இன்னும் கொஞ்ச நேரம் பேசக் கூடாதா ன்னு நெனைக்கறா மாதிரி இருக்கணும்.

 

இடம்பட வீடு எடேல்

idampada viidu edel

உன்னோட தேவைக்கு மேல பெரிசா வீட்டைக் கட்டாதே.

அழகா இருக்குன்னோ, நமக்குப் பிடிச்சிருக்குன்னோ பெரிசா ஒரு வீட்டை வாங்கிட்டோன்னா அப்பறம் அதுக்கு உண்டான கடனைக் கட்டறது கஷ்டம். அந்த வீட்டு அளவுக்கு ஏத்தா மாதிரி சாமான் வாங்கணும், வீட்டை அழகு படுத்தணும், அடிக்கடி சுத்தம் பண்ணணும் இப்படி நிறைய செலவுகள் மேல மேல வரும். அதனால ஆரம்பத்துலேயே நமக்கு ஏத்தா மாதிரி அளவுல வீடு வாங்கறதுதான் சரி.

 

இணக்கம் அறிந்து இணங்கு

inakkam arinthu inangu

ஒருத்தரை நண்பனா எடுத்துக்கறதுக்கு முன்னால அவர் யார்ன்னு தெரிஞ்சுக்கணும். அவர் நல்ல குணம் இருக்கறவரா, அவர் செய்யறதெல்லாம் நல்ல செயலா அப்டீன்னு எல்லாம் தெரிஞ்சுண்ட ஆப்பறம் தான் ஒருத்தரை நண்பனா எடுத்துக்கணும்.

 

ந்தை தாய்ப் பேண்

thanthai thai pen

உன்னோட அம்மா,அப்பாவை அவங்களோட வயசான காலம் வரைக்கும் அன்போட பாத்துக்கோ.

நம்ம வேலை, குடும்பம் இதுக்கேல்லாம் நடுவுல பெத்தவங்கலைப் பாத்துக்கறது ரொம்ப கஷ்டமான விஷயம்.இருந்தாலும் ஏதாவது திட்டம் போட்டு,எப்படியாவது அவங்கலைக் கடைசி காலம் வரைக்கும் நன்னா பாத்துக்கோ.

 

ன்றி மறவேல்

nandri maravel

ஒருத்தர் உனக்கு ஒரு உதவி செஞ்சார்னா அதை எப்பவுமே மறக்காதே. சரியான நேரத்துல கெடைக்கற உதவி உலகத்தை விடப் பெரியதுன்னு திருவள்ளுவர் சொல்றார். மற்றவர்களுடைய உதவி இல்லாமல் நாம வளர முடியாது. அப்படி உதவி செய்யறவங்கள் கிட்ட அதை மறக்காம நன்றியொட இரு.

 

ருவத்தே பயிர் செய்

paruvatthe payir sei

விவசாயம் பண்ணும் போது அந்தந்தக் காலத்துக்கு தகுந்தா மாதிரி தான் பண்ணனும். வெய்யில் காலத்துக்கு இது, காத்தடிக்கற காலத்துக்கு இது, மழை காலத்துக்கு இதுன்னு பயிர்களை பிரிச்சு வெச்சிருப்பாங்க. அதை மாத்தி பண்ணா அந்தப் பயிர் வளராது. வாழ்க்கையிலேயும் எதை எப்ப பண்ணனுமோ அதை அப்ப தான் பண்ணனும். படிக்கற வயசுல படிக்கணும். வேலைக்கு போகற வயசுல வேலைக்கு போகணும்.கலியாணம் பண்ணிக்கற வயசுல கல்யாணம் பண்ணிக்கணும்.

 

ண் பறித்து உண்ணேல்

mann paritthu unnel

பிறத்தியாரோட மண்ணை அதாவது சொத்தை திருடறது தப்பு.

சொத்து, நிலம் இந்த மாதிரி பொருட்கள் மேல எல்லாருக்குமே ஆசை வரும். அதுல தப்பு இல்ல. அந்த மாதிரி சொத்தை நீ சம்பாதித்து தான் வாங்கணும். மத்தவாளோடத ஏமாத்தி வாங்கிக்கலாம்னு நெனைக்காதே.

 

இயல்பு அலாதன செய்யேல்

iyalbu alaathana seiiyel

நல்ல குணங்களோட ஒழுக்கமா வாழறதுதான் நமக்கு விதிக்கப்பட்ட இயல்பான வாழ்க்கை. கடவுள் நாம எல்லாரையுமே படைக்கும் போது நல்ல மனசு, நல்ல எண்ணங்கள் இதோடதான் படைக்கறார். அது தான் நம்ப எல்லாரோட இயல்பு. ஆனா நாம தான் கெட்ட விஷயங்கலைக் கத்துண்டு செய்யவும் ஆரம்பிக்கறோம்.  அப்படி நம்பளோட இயல்புக்கு  வராத விஷயத்தை  பண்ணாதே.

 

அரவம் ஆட்டேல்

aravam aattel

அந்தக் காலத்துல கிராமங்கள்ல வாழ்ந்தப்ப, சுத்தி நிறைய பாம்பு எல்லாம் சர்வ சாதாரணமா இருக்கும். அந்தப் பாம்ப கைல பிடிச்சு விளையாடுவாங்க. அந்த மாதிரி செய்யாதேன்னு ஔவையார் சொல்லி இருக்கார். கெட்ட விஷயங்கள் எல்லாம் பாம்போட விஷம் மாதிரி.  அத நெருங்காதே.

 

இலவம் பஞ்சில் துயில்

ilavam pannchil thuyil

இலவம் பஞ்சுங்கறது ரொம்ப மென்மையானது. அதுல பண்ணின படுக்கைல  தூங்கு. நிம்மதியான தூக்கம் தரா மாதிரி உன்னோட படுக்கையை அமைத்துக் கொள். நமக்கு சாப்பாடு எவ்வலவு அவசியமோ அந்த அளவுக்கு தூக்கமும் அவசியம். உடல் ஆரோக்கியத்துக்கு சாப்பாடு மாதிரி மனசோட ஆரோக்கியத்துக்கு தூக்கம் அவசியம். நல்ல படுக்கையில நிமதியா தூங்கு.

 

ஞ்சகம் பேசேல்

vannchakam pesel

வஞ்சகம் அப்டீங்கறதுக்கு நரிய உதாரணமா சொல்வோம். நரி மாதிரி வஞ்சகம் பண்ணினான் நு சொல்வோம்.

அப்படி நம்மோட வாழ்க்கைல நாம மத்தவங்கள ஏமாத்தறது தப்பு.

 

அழகு அலாதன செய்யேல்

azhagu alaathana seiiyel

அழகு இல்லாதத செய்யாதே.

நல்லது தான் எப்பவுமே அழகு. நம்ம பேச்சு, செயல்கள் எண்ணங்கள் எல்லாமே எப்பவும் நல்ல தா இருக்கணும். அதுதான் அழகு. 

 

இளமையில் கல்

ilamayil kal

சின்ன வயசு,  படிக்க வேண்டிய வயசு. அந்த வயசுல மத்த விஷயங்கள்ள கவனம் செலுத்தி படிக்காம விட்டுடாதே.  பின்னால வருத்தப் படுவே. அதனால மாணவப் பருவத்துல படிப்புல கவனமா இரு.

 

அறனை மறவேல்

aranai maravel

என்ன ஆனாலும் கடவுளை மறக்காதே.

நமக்கு எவ்வளவு புத்திசாலித்தனம்,திறமை, படிப்பு,வேலை எல்லாமே இருந்தாலும் நமக்கு மேல ஒரு சக்தி இருக்கு. அது தான் கடவுள். கடவுளை எப்பவும் மறக்காதே.

 

அனந்தல் ஆடேல்

ananthal aadel

அளவுக்கு அதிகமான தூக்கம் நல்லது இல்ல. நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கழிச்சுட்டா வாழ்க்கைல முன்னேற முடியாது. அதனாலே அளவுக்கு அதிகமா தூங்காதே.