If there are any errors in the script or the narration, please send a note to contact@seva.gurukula.com
ஒரு ஊருல ஒரு காக்கா இருந்துது. அப்போ வெய்யில் காலம். காக்காவுக்கு ரொம்ப தாகமா இருந்துது. பக்கத்துல பாத்தா எங்கியும் தண்ணியே இல்ல. தூரமா தேடி பாத்தா அங்கயும் தண்ணி இல்ல.
தேடி தேடி பாத்துது. ஆனா எங்கேயுமே தண்ணி கெடைக்கல. காக்கா கஷ்டப்பட்டு ரொம்ப தூரம் பறந்துது. ரொம்ப நேரம் பறந்துது. கடைசீல காக்கா ஒரு பானைய பாத்துது.
காக்காவுக்கு ரொம்ப சந்தோஷம். ஆசையா பானை கிட்ட போச்சு. ஆனா பானைல கொஞ்சூண்டு தண்ணிதான் இருந்துது. காக்காவால தண்ணிய குடிக்கவே முடியல.
காக்கா யோசிச்சிது, "எப்படி இந்த தண்ணிய குடிக்கறது?” ன்னு.
புத்திசாலி காக்கா ஒரு யோசன பண்ணித்து. அதுக்கு பக்கத்துல கொஞ்சம் கல்லு இருந்துது. காக்கா ஒரு கல்ல எடுத்துண்டு வந்துது.
பானைக்குள்ள போட்டுது.
மறுபடியும் இன்னொரு கல்ல எடுத்துண்டு வந்துது. அதையும் பானைக்குள்ள போட்டுது.
மறுபடியும் மறுபடியும் இத பண்ணித்து.
தண்ணி கொஞ்சம் கொஞ்சமா மேல வந்துது. காக்கா சந்தோஷமா தண்ணிய குடிச்சிது. பறந்து போயிடுத்து.
காக்கா புத்திசாலி இல்லயா?